இலக்குகள் எங்கு, எந்த நேரத்தில் நிறுவப்பட்டாலும் அதை அழிக்கக்கூடிய அணு ஆயுதப்படை தயார் - வடகொரியா - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆசிய நாடான வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து அச்சுறுத்தி வருகிறது.

இதனிடையே, அணு ஆயுத வல்லமை பெற்ற அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் தென் கொரியாவுக்கு வந்த நிலையில், இரு நாடுகளும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து கடந்த சில நாட்களாக வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதில் ஒரு ஏவுகணை ஜப்பான் வான்பரப்பை தாண்டி பசுபிக் கடலில் விழுந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் வடகொரியாவின் சோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. இதனால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் உண்மையான போர் திறன், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் எங்கு, எந்த நேரத்தில் நிறுவப்பட்டிருந்தாலும், அதை தாக்கி அழித்து துடைத்தெறியும் அணு ஆயுத வல்லமைகொண்ட அணு ஆயுத படைப்பிரிவு தயாராக உள்ளது என வடகொரியா தெரிவித்துள்ளது. 

மேலும் வடகிழக்கு பகுதியில் ஏவப்பட்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணை, தென்கொரிய விமானப்படை தளத்தை அழிக்க நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அணு ஆயுதங்களை சுமந்து சென்று ஏவுகணை, ஜப்பான் வான்பரப்பு மேல் பறந்து சென்ற நிலத்தில் இருந்து ஏவப்பட்டு நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை ஏவுதலை அதிபர் பார்வையிட்டார் என வடகொரியா தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea says its nuclear weapon forces are ready to destroy targets


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->