வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை !
North Korea teat ballistic missile again in Japan sea
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள், ஐநா மற்றும் உலக நாடுகளின் எச்சரிக்கையும் மீறி வடகொரியா தனது எல்லை பகுதிகளில் ஆணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
மேலும் அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையான போர் பயிற்சி நடைபெற்றதை எதிர்த்து கடந்த இரண்டு மாதங்களாக ஏவுகணை சோதனைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. இதனால் கொரியா தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் வடகொரியா நீண்ட தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவி சோதனை நடத்திய உள்ளதாக ஜப்பானின் கடலோர காவல் படை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஏவுகணை ஜப்பானுக்கும், கொரிய தீபகற்பத்திற்கும் இடையே உள்ள கடலில் தரையிறங்கியதாக கடலோர பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீப காலமாக கொரிய தீபகற்பத்தில் அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்து வடகொரியா நடத்தி வரும் அணு ஆயுத ஏவுகணை நடவடிக்கைகள், அண்டை நாடுகளுக்கிடையே மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் கவனம் செலுத்தி வரும் வடகொரியா, அமெரிக்காவை முழுமையாக அணுசக்தி மூலம் அழித்து விடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
North Korea teat ballistic missile again in Japan sea