கால்பந்து மைதானத்தில் தவறி விழுந்த ரசிகர் உயிரிழப்பு.! ஒருநாள் துக்கம் அனுசரிப்பு..! - Seithipunal
Seithipunal


தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் தலைநகர் ப்யூனஸ் அயர்ஸில் உள்ள எஸ்டாடியோ மாஸ் நினைவுச்சின்ன மைதானத்தில் ரிவர் பிளேட் அணிக்கும் டெப்சேனா ஒய் ஜஸ்டிகா அணிக்கும் இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் கூடியிருந்தனர்.

இந்நிலையில் போட்டி நடைபெறும் பொழுது பாப்லோ மார்செலோ செரானோ என்ற 53 வயதான ரசிகர், மைதானத்தின் கேலரியில் அமர்ந்திருந்த போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து மருத்துவ அவசரநிலை குறித்து நடுவர் பெர்னாண்டோ ரபாலினிக்கு தெரிவிக்கப்பட்டதால் 14 நிமிடங்களுக்கு ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஆட்டம் தொடரப்பட்டது. மேலும் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு அலுவலர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்த பின்பு ஸ்டாண்டில் இருந்த ரசிகர்களை பத்திரமாக வெளியேற்றினர். 

இதன்பின்னர் ரசிகர் உயிரிழந்ததற்கு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டதுடன், மைதானம் 24 மணி நேரத்திற்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One day mourning followed as football fan died in stadium in Argentina


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->