ஆப்கானிஸ்தான் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்: போர் மூளுமா என்ற அச்சம்..?
Pakistan bombed and attacked Afghanistan: fear of war..?
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறித்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெக்ரீக்-இ-தலிபான் என்ற அமைப்பு ஆப்கானிஸ்தான் இருந்து கொண்டு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஆப்கானிஸ்தானில் ஆளும் அரசு ஆதரவளித்து வருவதாக பாகிஸ்தான் ஏற்கனவே குற்றம் சாட்டியும் உள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பத்திக்கா என்ற மாகாணத்தில் 7 கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் விமானங்கள் மூலம் குண்டு வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானங்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறித்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இவர்களில் ஐந்து பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் சிலர் காணாமல் போனதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆப்கான் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பாகிஸ்தாநின் குண்டு வீச்சு தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதோடு, இது ஒரு கோழைத்தனமான தாக்குதல் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளுமா என்ற அச்சம் நிலவுவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
English Summary
Pakistan bombed and attacked Afghanistan: fear of war..?