"திவாலான நாட்டில் தான் வாழ்கிறோம்." பாகிஸ்தான் அமைச்சர் மேடையில் போட்டுடைப்பு.!  - Seithipunal
Seithipunal


ஸ்ரீ லங்காவைத் தொடர்ந்து பாகிஸ்தான் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. கடந்த மாத கடைசியில் பாகிஸ்தானின் பணவீக்கமானது 24.5 சதவீதமாக அதிகரித்தது. அத்தியாவசிய, உணவு பொருட்களின் விலையானது, வெளிச்சந்தையில் கடந்த மாதத்தை விட 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை அதிகரித்து இருக்கின்றது. 

தற்பொழுது, பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பாலின் விலையானது ₹.250க்கும், இறைச்சி ₹.750க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக, சாமான்ய மக்களின் அன்றாட வாழ்க்கையானது மிகப்பெரிய சவாலாக மாறி இருக்கின்றது.

இத்தகைய நிலையில், பாகிஸ்தான் நாட்டின் சியால்கோட் நகரில் நடந்த பட்டமளிப்பு விழா ஒன்றின் போது பேசிய பாகிஸ்தான் நாட்டுடைய பாதுகாப்புத்துறை அமைச்சரான கவாஜா முகமத் அசிப், "பாகிஸ்தான் அரசு ஏற்கனவே திவாலாகி விட்டது. இந்த நிலைக்கு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் தான் பொறுப்பு. 

திவாலான ஒரு நாட்டில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம்முடைய பிரச்சினைகளுக்கு நம்மிடம் தான் தீர்வு இருக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தானின் பிரச்சினைகளுக்கு  தீர்வு இல்லை." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Minister about Pakistan economy situation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->