குழந்தைகள் செய்த தவறு.. அபராதம் கட்டிய பெற்றோர்..! அதிகாரிகள் அதிரடி..!
Parents paid penalty for childrens mistake
சார்லோட் ரஸ் என்பவர் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர். இவர் தனது குழந்தைகளுடன் பிஸ்மோ கடற்கரைக்குச் சென்றுள்ளார். அங்கு அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் கடல் அலைகளில் கால் நனைத்து விளையாடியுள்ளனர்.
இந்நிலையில் அவரது குழந்தைகள் கீழே கிடந்த Clams எனப்படும் மட்டி என்ற ஒரு உயிரினத்தை கடற்சிப்பி என்று தவறுதலாக நினைத்து அவற்றை சேகரித்துள்ளனர். அந்தக் குழந்தைகள் அவற்றை சிப்பி என்று தான் நினைத்துள்ளனர். அப்படி மொத்தம் 72 மட்டிகளை சிப்பி என்று தவறுதலாக நினைத்து அக்குழந்தைகள் சேகரித்துள்ளனர்.
இதையடுத்து பிஸ்மோ கடற்கரையில் இருந்த மீன்வளத்துறை அதிகாரிகள் உரிய அனுமதியின்றி மட்டி உயிரினத்தை சேகரித்ததற்காக, அந்தக் குழந்தைகளை பிடித்ததோடு மட்டுமல்லாமல், அக்குழந்தைகளின் தாயாருக்கு 88 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்துள்ளனர்.
இதன் இந்திய மதிப்பு சுமார் 73 லட்சம் ஆகும். இதனால் அதிர்ச்சியடைந்த சார்லோட் ரஸ் குழந்தைகள் அறியாமல் செய்த தவறுக்காக இவ்வளவு அபராதம் விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஊடகங்களில் கூறியுள்ளார்.
இதற்கு மீன்வளத்துறை அதிகாரிகள் "மட்டி உயிரினங்கள் நான்கரை அங்குலத்திற்கு குறைவாக இருக்கும்போது எவரேனும் அதை எடுத்துச் சென்றால் மிகக் கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்பது தான் விதி. அதன்படி தான் சார்லோட்டிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்று விளக்கம் அளித்துள்ளனர்.
English Summary
Parents paid penalty for childrens mistake