தென் கொரியா விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தீப்பிடிப்பு; 176 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்..!
Passenger plane catches fire in South Korea
தென் கொரியாவின் கிம்ஹே விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தீப்பிடித்துள்ளது. இதன்போது 176 பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தென் கொரியாவின் கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று ஹாங்காங்கிற்கு, 169 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்கள் என மொத்தம் 176 பேருடன் புறப்பட தயாராக இருந்த நிலையில், புறப்படுவதற்கு சில நிமிடத்திற்கு முன்பு விமானம் தீப்பிடித்துள்ளது.
இதையடுத்து விமானத்திலிருந்து 176 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். குறித்த தீ விபத்தில் மூன்று பேருக்கும் மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தீ பிடிப்பதற்கு சற்று முன், சுதாரித்துக் கொண்ட விமானியால், அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு பறவை மோதியதே காரணம் என்று உறுதி செய்யப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், கடந்த டிசம்பர் 29ஆம் தேதி பாங்காங்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என 181 பேரை ஏற்றிக் கொண்டு, தென்கொரியா புறப்பட்ட விமானம், முவான் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது.
விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீ பற்றியதில், அதில் பயணித்த 179 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 விமானிகள் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியமை நினைவில் கொள்ளத்தக்கது.
English Summary
Passenger plane catches fire in South Korea