ஒற்றை பெயர் கொண்டவர்கள் இனி ஐக்கிய அரபு அமீரகம் செல்ல முடியாது!
People with single name cannot allowed travel to the UAE
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொள்வோர் தங்களது பாஸ்போர்ட்டில் ஒற்றைப் பெயர் வைத்திருப்பவர்களாக இருந்தால் இனி அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஸ்போர்ட்டில் ஒற்றை பெயர் வைத்திருப்பவர்கள் இனி சுற்றுலா விசா, தங்கி செல்லக்கூடிய விசா மற்றும் எந்த வகையான விசாவாக இருந்தாலும் பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை கடந்த நவம்பர் 21 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட்டில் முதல் மற்றும் இரண்டாவது பெயர்கள் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். அதன்படி பாஸ்போர்ட்டில் உள்ள முதல் பெயர், குடும்ப பெயர் மற்றும் இரண்டாவது பெயர் ஆகியவற்றில் ஒரே மாதிரியான பெயர் கொண்டால் அவர்களது விசா ரத்து செய்யப்படும்.
அதேபோன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்க உரிமை பெற்றவர்கள் மற்றும் நிரந்தர விசா பெற்றவர்கள் தங்களது பாஸ்போர்ட்டில் முதல் பெயரிலும் குடும்பப் பெயரிலும் ஒரே மாதிரியான பெயர் இடம் பெற்றிருந்தால் அதனை பதிவேற்றி புதுப்பித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் ஒற்றை பெயர் கொண்ட பயணிகள் ஐக்கிய நாட்டிற்கு செல்ல முடியாத சூழல் உண்டாகியுள்ளது.
English Summary
People with single name cannot allowed travel to the UAE