பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 35 ரூபாய் உயர்வு.!
Petrol and diesel price hiked by Rs 35 per liter in Pakistan
பாகிஸ்தான் அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 35 ரூபாய் உயர்த்தியுள்ளது.
ஆசிய நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அன்னிய செலாவணி பற்றாக்குறை, உணவு நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், கோதுமை உள்ளிட்ட தானியங்களின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை விட்டருக்கு 35 ரூபாய் உயர்த்தி பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. உலக சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாலும், அமெரிக்கா டாலருக்கு எதிராக பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 12 சதவீதம் குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து நிதி பற்றாக்குறையை சமாளிக்க, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், டீசல் மற்றும் பெட்ரோலின் விலை ஏற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தர் தெரிவித்துள்ளார்.
English Summary
Petrol and diesel price hiked by Rs 35 per liter in Pakistan