தடுப்பூசி போடாத மக்களை 'நான் உச்சா விடுவது போல உதாசீனப்படுத்த போகிறேன்' - அதிபர் பேச்சால் அதிரும் நாடு.!
Piss Them Off Frances.
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் ஏற்படும் உயிர் பாதிப்புகளை தவிர்ப்பதற்காக, தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
பல நாட்டு அரசாங்கங்களும் தங்கள் மக்களை தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். அந்தவகையில் பிரான்ஸ் நாட்டு மக்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அந்நாட்டு அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மக்கள் குறித்த கருத்து சர்ச்சையாகி உள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மக்கள் குறித்து இம்மானுவேல் மேக்ரான் கூறிய கருத்தாவது, "தடுப்பதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை நான் சிறைக்கு அனுப்பப் போவதில்லை. அவர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு நான் கட்டாயப்படுத்த போவதுமில்லை.
என்னுடைய திட்டம் மிக எளிமையானது.. நான் அவர்களை வெறுப்படைய வைக்க போகிறேன், அவர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் உணவகங்களுக்கு செல்லமுடியாது. தேநீர் கடைக்குச் சென்று தேநீர் குடிக்க முடியாது. திரையரங்கு சென்று படம் பார்க்க முடியாது, அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. இப்படியாக நான் வெறுப்படைய வைக்க போகிறேன்.
தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை நான் சிறுநீர் கழிப்பது போல் உதாசீனப்படுத்த போகிறேன். அதுதான் இனி இந்த அரசின் கொள்கையாக இருக்கும்" என்று இமானுவேல் தடுப்பூசி போடாத மக்களை தரக்குறைவாக பேசி உள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
இன்னும் 4 மாதங்களில் பிரான்ஸ் நாட்டில் அதிபருக்கான தேர்தல் நடக்க உள்ள நிலையில், இமானுவேல் பேசிய வார்த்தைகள், அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. இதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.