சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் - பிரதமர் மோடி அறிவிப்பு.!
pm modi info tiruvalluvar cultural center in singapore
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருக்குறளின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பும் வகையில், திருவள்ளுவர் கலாசார மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி, வாக்குறுதி அளித்திருந்தார்.
அந்த வகையில், தற்போது அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம், முதலாவது திருவள்ளுவர் கலாசார மையத்தை சிங்கப்பூரில் அமைப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த கலாசார மையத்தின் மூலம், திருக்குறள் சிறப்பு, தமிழ் மொழியின் இலக்கிய வளம், கலாசார சிறப்புகள் உள்ளிட்டவைக் குறித்து வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.
இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:- "சிங்கப்பூரில் தமிழ் மொழி, நாகரிகம், பண்பாடு, இவற்றை வளர்க்கவும், பேணி காக்கவும், திருவள்ளுவர் கலாசார மையம் ஒன்றை நிறுவ உள்ளதாக அறிவித்தமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் அமைப்பதற்கு சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், தமிழகத்திலும் பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்தும் வரவேற்பும், பாராட்டும் குவிந்து வருகிறது.
English Summary
pm modi info tiruvalluvar cultural center in singapore