ஒடிசா ரயில் விபத்திற்கு போப் பிரான்சிஸ் இரங்கல்..!! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலும் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் தற்பொழுது வரை 275 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவையே உலுக்கிய இந்த கோர சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும், உலக நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் போப் பிரான்சிஸ் ஒடிசா ரயில் விபத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போப் பிரான்சிஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "இந்தியாவில் 2 நாட்களுக்கு முன்பு (ஜூன் 2) ஏற்பட்ட ரயில் விபத்தில் இறந்தவர்களுக்காக நான் பிரார்த்தித்து கொள்கிறேன். ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது அன்பை வெளிப்படுத்துகிறேன். உயிரிழந்தவர்களின் ஆன்மாக்களை சொர்க்கத்தில் இருக்கும் இறைவன் தனது ராஜ்ஜியத்திற்குள் சேரட்டும்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pope Francis condoles the Odisha train accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->