அடக்கடவுளே!!! சக்தி வாய்ந்த நிலநடுக்குமா!!! பீதியில் நியூசிலாந்து மக்கள்!!!
Powerful earthquake New Zealanders in panic
நியூசிலாந்து நாட்டின் மேற்கு பகுதியில் இந்திய நேரப்படி காலை 7:13 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இது ரிக்டர் அளவில் 7 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் பயங்கர நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வெளியே ஓடிவந்துள்ளனர்.இது குறிப்பாக தெற்கு தீவின் தென்மேற்கு பகுதியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் தெரிவித்துள்ளது.
இந்த திடீர் நிலநடுக்கத்தால் தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.இருப்பினும் மக்கள் பீதியில் உள்ளனர்.
இதுவரை நியூசிலாந்திலேயே பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம் என்றால் அது 1931ம் ஆண்டு ஹாக்ஸ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் தான்.
அது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது.அதனால் 256 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Powerful earthquake New Zealanders in panic