லேப்டாப், ஸ்மார்ட்போன்களுக்கு வரி விலக்கு விதித்த அதிபர் டிரம்ப்....!!!
President Trump exempts laptops and smartphones from taxes
'டொனால்டு டிரம்ப்' மீண்டும் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.

இதில் கடந்த 2-ம் தேதி இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை அறிவித்து உலக மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார். மேலும் இந்திய பொருட்களுக்கு 26 % வரி விதிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்தது. அதில் அமெரிக்க பொருட்கள் மீது 34 % வரி விதித்தது. இதனால் சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரிகளிலிருந்து கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட மின்னணு பொருட்களுக்கு வரி விலக்கு அளித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில், இதுவரை 20 பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் அரை கடத்திகள் அடிப்படையிலான மின்னணு கருவிகள், தரவுகள் சேமிப்பு கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.இது தற்போது உலக நாடுகளிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
President Trump exempts laptops and smartphones from taxes