எலான் மிஸ்கிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு...! தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு துறைகளை குறித்து.... பிரதமர் மோடி!!!
Prime Minister Modi spoke Elon Musk phone technology and innovation sectors
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகத்தில் உலகின் NO.1 பணக்காரரான 'எலான் மஸ்க்' முக்கிய பங்கு வகிக்கிறார். மேலும்,டிரம்ப் புதிதாக தொடங்கிய அரசு செயல்திறன் துறையின் {Department of Government Efficiency (DOGE)} தலைவராக எலான் மஸ்க் தற்போது உள்ளார்.இந்த புதிய துறை, அரசு செலவினங்களை குறைப்பதற்காகவும், அரசு நிர்வாகத்தை திறமையாக வழி நடத்துவதற்காகவும் தொடங்கப்பட்டது.

அதுமட்டுமின்றி இந்திய பிரதமர் மோடி, இந்த வருட தொடக்கத்தில் அமெரிக்கா பயணத்தின்போது டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இருவரையும் சந்தித்து உரையாடினார்.
இந்நிலையில் பிரதமர் மோடி, இன்று எலான் மஸ்க் உடன் தொலைபேசியில் பேசியதாகவும் அப்போது டெக்னாலாஜி மற்றும் புதிய கண்டுபிடிப்பில் இருநாட்டு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி:
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது,"பல்வேறு விசயங்கள் குறித்து எலான் மஸ்க் உடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
இந்த வருட தொடக்கத்தில் அமெரிக்கா சென்றிருந்தபோது, எலான் மஸ்க் உடன் நடைபெற்ற ஆலோசனையின் போது பேசப்பட்ட அம்சங்களும் இதில் அடங்கும்.
தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு துறைகளில் ஒத்துழைப்புக்கான மகத்தான சாத்தியக் கூறுகள் பற்றி நாங்கள் விவாதித்தோம். இந்த துறைகளில் அமெரிக்காவுடனான கூட்டாண்மைகளை மேம்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து உறுதியாகவுள்ளது" எனத் தெரிவித்தார்.
English Summary
Prime Minister Modi spoke Elon Musk phone technology and innovation sectors