ரஷ்யா, கிரீமியாவை இணைக்கும் பாலத்தில் குண்டு வெடிப்பு.! பாதுகாப்பை பலப்படுத்த புதின் உத்தரவு
Putin order strengthen security in places between Crimea and Russia
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து கெர்சன் ஜபோரிஜியா உள்ளிட்ட முக்கிய நகரங்களை மீண்டும் கைப்பற்றியுள்ளன.
மேலும் தொடர்ந்து முன்னேறி வரும் உக்ரைன் படைகள், ரஷ்யா மற்றும் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தியுள்ளன.
இது ரஷியாவின் தளவாட பகுதிகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு உக்ரைன் படைகள் இந்த பாலத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யா மற்றும் கிரீமியா பகுதிகளை இணைக்கும் கெர்ச் நீரினை பகுதியில் கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்த ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கெர்ச் நீரினை பகுதியில் போக்குவரத்து, மின் இணைப்பு பாலம் ரஷ்யாவின் கிராஸ்னோடார் பகுதி மற்றும் கிரீமியாவுக்கு இடையேயான முக்கிய எரிவாயு குழாய் இணைப்பு பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தேவையான பாதுகாப்புகளை வழங்கும்படி ரஷ்ய பாதுகாப்பு படையினருக்கு அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Putin order strengthen security in places between Crimea and Russia