ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை வழக்கு; உள்துறைக்கு 04 வார கால அவகாசம்..!
Rahul Gandhi dual citizenship case 4 weeks time for the Home Ministry
லோக்சபா எதிர்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி ஏற்கனவே பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி 2019-ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து தெளிவுப்படுத்துமாறு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், கர்நாடகா பா.ஜ.,வைச் சேர்ந்த பிரமுகர் உபி. மாநில அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், காங்கிரஸ் எம்.பி., ராகுல், இந்திய குடியுரிமை மற்றும் பிரிட்டன் குடியுரிமை என சட்ட விரோதமாக இரட்டை குடியுரிமை வைத்துள்ளார் எனவும், இந்திய குடியுரிமை சட்டத்தின்படி, அவர் இந்திய குடிமகன் என்ற தகுதியை இழந்துவிட்டார் எனவும், விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் விசாரித்து ராகுலின் குடியுரிமையை ரத்து செய்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், ராகுல் மீதான இரட்டை குடியுரிமை வழக்கில் உள்துறை அமைச்சகம் 04 வாரங்களுக்கு முடிவு எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில் எட்டு வார கால அவசியம் கோரியது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி மறுத்துள்ள நிலையில், முடிவு எடுத்து 04 வார கால அவகாசம் அளித்து வழக்கின் விசாரணையை ஏப்ரல் 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
English Summary
Rahul Gandhi dual citizenship case 4 weeks time for the Home Ministry