அர்ஜென்டினாவில் கால்பந்து போட்டியில் கலவரம்.. ரசிகர் ஒருவர் பலி.!
Riot in Argentina football match fan death
அர்ஜென்டினாவில் கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் ரசிகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சமீபத்தில் இந்தோனேசியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று அர்ஜென்டினாவில் நடந்த கால்பந்து போட்டியின் போது ரசிகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று அர்ஜென்டினாவின் உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது. அதன் காரணமாக இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர்.
இந்த நிலையில் மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பியதால், ரசிகர்களை உள்ளே விடாமல் கேட் இழுத்து பூட்டப்பட்டது. இதனால் ரசிகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கலவரமாக மாறியது.
இதனையடுத்து கலவரத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த கலவரத்தில் ரசிகர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர்.
English Summary
Riot in Argentina football match fan death