உக்ரைன் மீது ரஷியா மீண்டும் தாக்குதல்.. 16 பேர் பலி: ஜெலன்ஸ்கி கண்டனம்!
Russia attacks Ukraine again Zelensky condemns death of 16 people
உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷியா நேற்று சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியதில் 16 பேர் பலியாகினர்.ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ரஷியா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் இருநாடுகளுக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதால் ரஷியா-உக்ரைன் இடையே விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷியா நேற்று சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் உள்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகினர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்தனர்.
ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
English Summary
Russia attacks Ukraine again Zelensky condemns death of 16 people