ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயித்த எண்ணெய் விலைக்கு ரஷியா மறுப்பு.! - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய ஒன்றியம் ரஷியாவில் இருந்து வரும் எண்ணெயின் விலையை பீப்பாய்க்கு 60 அமெரிக்க டாலராக நிர்ணயித்துள்ளது. இந்த விலையை ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து ஜி-7 இல் உள்ள பணக்கார நாடுகளும் நிர்ணயித்துள்ளன. 

இந்த விலை நிர்ணயத்தின் நோக்கம் ரஷ்யாவிலிருந்து உலக நாடுகளுக்கு வரும் எண்ணெயை தடையின்றி வழங்குவது ஆகும். இந்த எண்ணெயின் விலை  நிர்ணயிக்கும் நடவடிக்கையை அமெரிக்கா மட்டுமல்லமால், ஆஸ்திரேலியா மற்றும் ஜி-7 நாடுகளும் ஆதரித்துள்ளன.

ரஷியா மற்றும் உக்ரைன் போர் தொடங்கி இதுவரை பத்து மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. போர் தொடங்கிய பின், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி-7 நாடுகளும் ரஷியாவிலிருந்து இறக்குமதியாகும் எண்ணெய்க்கு தடை விதித்தன. இந்நிலையில், தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த விலை வரம்பு ரஷ்யாவின் பெறும் வருவாயைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான ஒன்றாகும்.

இந்த விலை நிர்ணயம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு எண்ணெய் விநியோகம் சீராக கிடைத்திட வழி வகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணெய் விலை வரம்பை, ரஷியா ஏற்க மறுத்து இந்த முடிவை நிராகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

russia denies for European Union set oil price


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->