அர்ஜென்டினாவிற்கு படையெடுக்கும் ரஷ்ய கர்ப்பிணி பெண்கள்.! ஏன் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


குடியுரிமைக்காக அர்ஜென்டினாவிற்கு வருகை தரும் ரஷ்யாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தூதராக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற நாடுகளை காட்டிலும் அர்ஜெட்டினாவில் குடியுரிமை பெறுவதற்கான விதிமுறைகள் எளிமையாக உள்ளது. குறிப்பாக பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக குடியுரிமை வழங்கப்படுகிறது. குழந்தைகளின் பெற்றோருக்கும் குறுகிய காலத்தில் விரைவாக குடியுரிமை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ரஷ்யாவில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அர்ஜென்டினாவிற்கு வரும் ரஷ்யாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் எண்ணிக்கை வழக்கத்தைவிட பல மடங்கு அதிகரித்துள்ளதாக அர்ஜென்டினா அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில் மட்டும் 5000க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் அர்ஜென்டினாவிற்குள் நுழைந்துள்ளனர். கடந்த வாரத்தில் ஒரே விமானத்தில் 33 கர்ப்பிணி பெண்கள் வந்ததாகவும், அவர்களின் மூன்று பேர் சரியான ஆவணங்கள் இல்லாததால் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரசவ காலங்களில் சுற்றுலா பயணிகளை போன்று நுழைந்து குழந்தைகளுக்கு குடியுரிமை பெற்றுக் கொள்வதை ரஷ்ய பெண்கள் வழக்கமாகக் கொண்டுள்ளதாக நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ரஷ்யர்கள் 87 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் செல்ல முடியும்.

ஆனால் அர்ஜென்டினா குடியுரிமை பெற்றவர்கள் 171 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். இதனால்  ரஷ்யாவை விட அர்ஜென்டினா பாஸ்போர்ட் அதிக சுதந்திரத்தை அளிப்பதால் ரஷ்ய பெண்கள் அர்ஜென்டினா குடியுரிமையை பெற விரும்புவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia pregnant women coming to Argentina for citizenship


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->