ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரம்.. இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை.!
Russia-Ukraine war Second phase talks today
ரஷ்யா-உக்ரைன் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்யா-உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கிடையே போரை முடிவுக்கு கொண்டுவர நேற்று முன்தினம் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்டை நாடான பெலாரஸில் நடைபெற்றது. அப்போது ரஷ்யப் படைகள் உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீண்ட நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என ரஷ்யாவும் உக்ரைனும் அறிவித்தனர். நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்த போது ரஷ்ய படை தாக்குதலை குறைத்திருந்த நிலையில், நேற்று மீண்டும் தாக்குதலை அதிகரிக்கத் தொடங்கியது. அந்தவகையில் கார்கிவ் நகரில் ரஷ்யப் படை ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.
இந்த நிலையில் ரஷ்யா உக்ரேன் இடையே இன்று மீண்டும் இரண்டாவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையிலாவது இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு போர் முடிவுக்கு வருமா.? என உலக நாடுகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
English Summary
Russia-Ukraine war Second phase talks today