கிரீமியாவில் இருந்து அவசரமாக வெளியேறும் ரஷ்ய ராணுவ தளபதிகள்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 6 மாதங்களையும் கடந்து நீடித்து வருகிறது. இப்போரில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்றும் முயற்சியில் தோல்வியடைந்த ரஷ்ய படைகள், தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளன.

மேலும் தொடர்ந்து போராடிவரும் உக்ரைன் படைகள் ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்கள், டொனெட்ஸ்க், இஸியம், பலாக்லியா மற்றும் குபியன்ஸ்க் நகரங்களை கைப்பற்றி 6000 சதுர கி.மீ வரை முன்னேறியுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிரீமியா மற்றும் உக்ரைன் தெற்கு பகுதியிலிருந்து ரஷ்யா ஆதரவு கிளர்ச்சி படையினர், உளவுத்துறையினர் மற்றும் ராணுவ தளபதிகள் வெளியேறி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

மேலும் ராணுவ அதிகாரிகள் ரஷ்யாவில் உள்ள தங்களது இல்லங்களுக்கு செல்வதாகவும், மற்றும் கிரீமியாவில் உள்ள தங்களது வீடுகளை ரகசியமாக விற்பதற்கு முயன்று வருவதாகவும், உக்ரைன் ராணுவ உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian military personnel leaves Crimea


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->