ரஷ்ய கடற்படை தளபதியை பொசுக்கிய உக்ரைன்! ட்விஸ்ட்டு கொடுக்கும் ரஷ்யா! மர்மம் நீடிக்குமா? - Seithipunal
Seithipunal


ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இந்த தாக்குதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. 

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு பல்வேறு வகையில் உதவி செய்து வருவதால் உக்ரைன் வீரர்கள் ரஷ்யா படையை எதிர்த்து தொடர்ந்து போரிட்டு வருகின்றனர். 

ரஷ்ய படையினர் உக்ரைனின் சில நகரங்களை கைப்பற்றியதால் உக்ரைன் வீரர்கள் அவற்றை போராடி மீட்டு வருகின்றனர். 

உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா பகுதியில் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். 

இதில் அதிக சேதம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக கிரீமியா தலைநகர் துறைமுகத்தில் உள்ள கருங்கடல், ரஷ்யா கடற்படை தலைமையகத்தில் 10க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி உக்ரைன் தாக்குதல் நடத்தியது. 

இந்த தாக்குதலில் கருங்கடல் கடற்படை தளபதியும், ரஷ்யாவின் மூத்த கடற்படை அதிகாரிகளுள் ஒருவரான விக்டர் சோகோலோவ் உள்பட 33 அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் படை தெரிவித்துள்ளது. 

ஆனால் இந்த தகவலை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தவில்லை. இதனால் கடற்படை தளபதி உயிரிழந்தாரா என்பதில் மர்மம் நீடித்து வருகிறது. கிரீமியா பகுதியை ரஷ்யா, உக்ரைனிடம் இருந்து கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian navy commander killed Ukraine attack


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->