பெல்ஜியம் சாக்லேட்களை சாப்பிட்ட 151 குழந்தைகளுக்கு 'சால்மோனெல்லா' நோய் தொற்று - உலக சுகாதார மையம்.!
Salmonella infection Belgium chocolates World Health Center
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் சாக்லெட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சாக்லெட்கள் இந்தியா உள்பட113 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஐரோப்பாவில் பெல்ஜியம் சாக்லேட்களை சாப்பிட்ட 151 குழந்தைகளுக்கு 'சால்மோனெல்லா' எனும் நோய் தொற்று பரவி வருவதாக உலக சுகாதார மையம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக 11 நாடுகளில் இந்த தொற்று நோய் பதிவாகியுள்ளது. இதில் லண்டனில் 65 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
பசியின்மை, உடல்வலி, 104 டிகிரி வரை காய்ச்சல், வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, தலைவலி உள்ளிட்டவை இந்த சால்மோனெல்லா நோயின் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
கெட்டுப்போன உணவுப் பொருட்கள், பச்சையான பால் பொருட்கள், நன்கு வேக வைக்காத இறைச்சி போன்றவற்றின் மூலம் பரவி வந்த இந்த நோய் தற்போது சாக்லேட் மூலம் பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Salmonella infection Belgium chocolates World Health Center