ரஷ்யா : அடுக்குமாடி கட்டிடத்தில் வெடிவிபத்து.! இரண்டு வயது குழந்தை உள்பட 7 பேர் பலி.!
seven peoples died for fire accident in apartment Novosibirsk nagar russia
ரஷியா நாட்டின் செர்பியா பகுதியில் உள்ள நோவோசிபிர்ஸ்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் மாலை ஒரு வீட்டில் கியாஸ் கசிவு ஏற்பட்டு, பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்தால் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்தனர்.
அந்த தகவலின் படி, தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இரண்டு வயது குழந்தை உள்பட மொத்தம் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் ஏழு பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கு முன்னதாக கடந்த ஏழாம் தேதி ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ அருகே யெப்ரெமோவ் நகரில் கியாஸ் கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் பலியானது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
seven peoples died for fire accident in apartment Novosibirsk nagar russia