ஸ்பெயின் அரசு செல்போன் பயன்படுத்துவதற்கு புதிய எச்சரிக்கை நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


இன்றைய உலகில் செல்போன் அன்றாட வாழ்க்கையின் அன்றியமையாத ஓர பகுதியாக மாறிவிட்டது. உணவு, தூக்கம் இல்லாமல் நாம் வாழ முடியும், ஆனால் செல்போன் இல்லாமல் வாழ்க்கை கற்பனை செய்ய முடியாத சூழலில் இருக்கிறோம். ஆனால் செல்போன் பயன்பாட்டின் அதிக அளவு உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதற்கு பல ஆய்வுகள் சுட்டிக்காட்டினாலும், பெரும்பாலானவர்கள் இதை சரியாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதன் பின்னணியில், ஸ்பெயின் அரசு முடிவுசெய்து, செல்போன் பயன்பாட்டை 'பொது சுகாதார தொற்றுநோய்' என குறிப்பிடி, மொபைல் போன்கள் உற்பத்தியில் புதிய எச்சரிக்கை வாசகங்களை சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது புகையிலை மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளில் உள்ள எச்சரிக்கைகளுக்குப் போன்றது.

50 நிபுணர்கள் கொண்ட குழுவொன்று, 250 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தயாரித்து, செல்போன் உபயோகத்தின் தீவிர விளைவுகளைப் பற்றி ஆராய்ந்து அதனை ஸ்பெயின் அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தொடர்பாக, 13 வயதுக்குள் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 வயது குழந்தைகளுக்கு டிஜிட்டல் சாதனங்கள் தவிர்க்கவேண்டும். 6 வயது குழந்தைகளுக்கு அப்போது தேவையான பொழுதில் செல்போன் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும், அதற்கு மேலாக 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இணையம் இல்லாத போன்கள் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளுக்கு விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என்றும், அப்படி செய்தால் அவர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஸ்பெயின் அரசு செல்போன் பயன்பாட்டின் தீமைகளை குறைக்கும் நோக்கில் இந்த புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Spanish Government New Warning Measures for Cell Phone Use


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->