இலங்கையில் கடுமையாக உயரத்தப்பட்ட மின்சார கட்டணம்.! இன்று முதல் அமல்.!
Srilanka hiked electricity charges after 9 years
இலங்கையில் கடுமையாக உயரத்தப்பட்ட மின்சார கட்டணம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
குறைவான அந்நிய செலாவணி கையிருப்பு, நிதி பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இலங்கையில் உணவு, எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை பன்மடங்காக உயர்ந்துள்ளது.
இதனால் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எண்ணெய் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் நஷ்டத்தில் இயங்கி வரும் மின்சார வாரியம், மின்கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்த முடிவெடுத்துள்ளது.
மின்வாரியத்தின் இந்த நடவடிக்கையால், ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.5 என வசூலிக்கப்படும் நிலையில், இனி ஒரு யூனிட்டுக்கு ரூ.8 வசூலிக்கப்படும்.
இதையடுத்து ஒரு யூனிட்டுக்கு 75% உயர்த்தப்பட்ட நிலையில் மாதம் 30 யூனிட்டுகள் பயன்படுத்தும் குடும்பத்தினர் 198 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் 9 வருடங்களுக்குப் பிறகு ஏற்றப்பட்ட கட்டண உயர்வுக்கு இலங்கை மின்சார வாரியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இன்று முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது.
English Summary
Srilanka hiked electricity charges after 9 years