சுற்றுலா பயணிகளின் வரத்தை அதிகரிக்க 13 ஆயிரம் பணம் - தைவான் அரசு அறிவிப்பு.!
taiwan government allounce thirteen thousand money to touristers
ஒவ்வொரு வருடமும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மக்கள் சுற்றுலா செல்வது வழக்கம். அதற்காக மக்கள் அதிகளவில் பணத்தை செலவிடுவார்கள். ஆனால், தைவானில் பிரபல சுற்றுலாத்தலம் ஒன்று 13 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெகுமதிகளை சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த தகவல் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. அதாவது, சுற்றுலாப்பயணிகளைக் கவரும் விதமாக தைவான் சுமார் ஐந்து லட்சம் பேருக்கு பணம் அல்லது தள்ளுபடி ஊக்கத் தொகையை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
அதாவது, இந்த வருடம் அறுபது லட்சம் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க இலக்கு வைத்துள்ள தைவான் அரசு, அடுத்தடுத்த வருடங்களில் இந்த எண்ணிக்கையை இருமடங்காக்குவதற்கு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், ஐந்து லட்சம் சுற்றுலாப்பயணிக்கு 13 ஆயிரத்து 600 ரூபாய் பணமும், 90 ஆயிரம் சுற்றுலா குழுக்களுக்கு 54 ஆயிரம் ரூபாயும் தைவான் அரசு வழங்க உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
taiwan government allounce thirteen thousand money to touristers