ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக வாக்னர் கூலிப்படை...! மாஸ்கோவில் பதற்றம் அதிகரிப்பு...! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போரில் ரஷ்ய ராணுவமும், ரஷிய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழுவும் இணைந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தின் வாக்னர் கூலிப்படை அமைப்பு ரஷ்யா ராணுவத்திற்கு எதிராக திரும்பியுள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆயுதக் கிளர்ச்சி ஏற்பட்டு ரஷ்யாவில் உள்நாட்டு போர் உருவாக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வாக்னர் கூலிப்படை அமைப்பின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் எங்கள் கூலிப்படை அமைப்புகளை அழிக்க ரஷ்ய ராணுவம் ஏவுகணைகளால் குறி வைத்து தாக்க முயன்றது. இதற்கு நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். ராணுவ தலைமையை எதிர்க்கும் இந்த போராட்டத்தில் வழியில் குறுக்கிடும் அனைத்தையும் அழித்து இறுதி வரை செல்வோம் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே வாக்னர் கூலிப்படைகள் ரஷ்ய நகரங்களை நோக்கி நகர்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதைத் தொடர்ந்து ரஷ்யா தலைநகர் மாஸ்கோ மற்றும் முக்கிய பகுதிகளில் ரஷ்ய ராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர். வாக்னர் கூலிப்படை ரஷ்யாவை நோக்கி நகர்வதை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யா ராணுவ தலைமைக்கும், வாக்னர் கூலி படைக்கும் இருந்த மோதல் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இது உக்ரைன் போரில் திருப்பத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tension in Moscow as Wagner troops against Russian army


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->