ஈராக் :: போலீசார் மீது பயங்கரவாதிகள் பயங்கர தாக்குதல் - 9 பேர் பலி
Terrorist attack on police killed 9 in iraq
மேற்காசிய நாடான ஈராக்கின் வடக்கு பகுதியான கிர்குக் மாகாணத்தில் ரியாத் மாவட்டத்தில் போலீசார் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு வாகனங்களின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தும், கையெறி குண்டுகள் வீசியும், துப்பாக்கிகள் மூலமும் பயங்கரவாதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த பயங்கர தாக்குதலில் 9 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 போலீசார் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீசார் நடத்திய எதிர் தாக்குதலில் பயங்கரவாதிகளில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மூன்று பேர் தப்பி ஓடி விட்டதாகவும் ஈராக்கின் ராணுவ மேஜர் ஜெனரல் யெஹியா ரசூல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கிர்குக் மாகாணத்தின் ஆளுநர் ரக்கன் அல் ஜுபூரி, தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளவும், சீர்குலைந்த பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த தகதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
English Summary
Terrorist attack on police killed 9 in iraq