சகோதரியுடன் சண்டை ; 09 மாத குழந்தையை தூக்கி வீசி கொலை செய்த பெற்ற தாய்..!
The mother threw the 9 month old baby to death
09 மாத குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசி பெற்ற தாய் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம், உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
காதல் திருமணம் செய்துகொண்ட அஞ்சு தேவி (27 வயது) என்ற பெண் தனது 09 மாத ஆண் குழந்தையுடன் தனது தாயின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அஞ்சு தேவியின் மூத்த சகோதரி மனிஷாவும் கடந்த இரண்டு மாதங்களாக அதே வீட்டில் வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அதேபோன்று நேற்று காலை சகோதரிகளுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அஞ்சுதேவி தனது 09 மாத குழந்தையை வீட்டின் மாடியிலிருந்து கீழே தூக்கி வீசியுள்ளார்.
அஞ்சுவின் தாய் ஷோபா தேவி குழந்தையை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
சகோதரியை சிக்க வைப்பதற்காக அஞ்சு தேவி குழந்தையை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. அவரின் தாய் ஷோபா தேவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அஞ்சு தேவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
The mother threw the 9 month old baby to death