அமெரிக்க அதிபருக்கு கொலை மிரட்டல் கடிதம்.! அனுப்பிய நபருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனை விதிப்பு.!
The person sent the letter threatening to kill the US president was sentenced to 33 months in prison
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உட்பட பல்வேறு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பிய நபருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜார்ஜியாவின் பார்னெஸ்வில்லியை சேர்ந்தவர் 56 வயதான டிராவிஸ் பால். இவர் உள்ளூர் நீதிபதிகள், உள்ளூர் மற்றும் மாவட்ட அரசாங்க அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும், சட்ட அமலாக்கத்திற்கு எதிராக பல கொலை மிரட்டல்கள் அனுப்பியுள்ளார். மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த கடிதத்தில் ஒரு வித வெள்ளை தூள் போன்ற பொருள் அடங்கிய பல அச்சுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளார். இதையடுத்து அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், இவர் மற்றொரு நபரின் பெயரை மாற்றுப்பெயராகப் பயன்படுத்தி இதுபோன்ற தொடர்ச்சியான கடிதங்களை அனுப்பி வந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கொலை மிரட்டல் கடிதங்கள் அனுப்பிய டிராவிஸ் பாலுக்கு, தலைமை அமெரிக்க மாவட்ட நீதிபதி மார்க் டிரெட்வெல், 33 மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் 7,500 அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
English Summary
The person sent the letter threatening to kill the US president was sentenced to 33 months in prison