ஜெர்மனியில் சோகம்.. சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி! - Seithipunal
Seithipunal


ஜெர்மனியில் கார் பாகங்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் சிலிண்டர் வெடித்ததில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக  பலியாகி உள்ளனர்.

உலக அளவில் மிக பெரிய நிறுவனம் பாஸ். கார்களுக்கு வேண்டிய பாகங்களை விற்பனை செய்துவருகிறது .இந்த  பாஸ் நிறுவனம் ஜெர்மனியில் கிளை நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.இந்தநிலையில்   இந்த நிறுவனத்தில் நேற்று கியாஸ் சிலிண்டர் ஒன்றில் இருந்து, சிலேன் என்ற வாயு கசிந்துள்ளது.

இதனால், நிறுவனத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் என்ன நடக்குது என பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது, அந்த சிலிண்டர் திடீரென வெடித்துள்ளது.பெரும் சத்தத்துடன் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது. 

இந்த சம்பவத்தில், 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்தனர். மற்றொரு நபருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, வேறொரு நிறுவனத்தின் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தது ஆழ்ந்த வருத்தம் ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர்களுடைய குடும்பத்தினருடன் எங்களுடைய நினைவுகள் உள்ளன என தெரிவித்து உள்ளார்.
மேலும் இந்த விபத்து சம்பவத்திற்கான காரணம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tragedy in Germany Two killed in cylinder blast


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->