பிரேசில்: அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த போல்சனாரோவுக்கு ஆதரவாக லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல்! - Seithipunal
Seithipunal


பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபா் ஜெயிா் போல்சனாரோவும், அவருக்கு எதிராக முன்னாள் அதிபரும், இடதுசாரி கட்சியான தொழிலாளா் கட்சியின் தலைவருமான லூலா டி சில்வாவுடன் சேர்த்து 11 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிட்டனர்.

இந்நிலையில், லூலா டி சில்வா 47.9 சதவீத வாக்குகளும், போல்சனாரோ 43.6 சதவீத வாக்குகளும் பெற்றனா். ஆனால் பிரேசில் அரசியலமைப்பு சட்டப்படி அதிபா் தோ்தலில் வெற்றி பெறுவதற்கு 50 சதவீத வாக்குகளை பெற வேண்டும். 

இதனால் முதல் இரு இடங்களைப் பெற்றவா்களுக்கு நேற்று முன்தினம் 2-வது சுற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 50 சதவீத வாக்குகளை பெற்று இடதுசாரி தலைவர் லூலா டி சில்வா வெற்றி பெற்றதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் மூன்றாவது முறையாக பிரேசிலின் அதிபராகியுள்ள லூலா டி சில்வாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல் நடத்தியுள்ளனர்.

மேலும் லூலா அதிபராக வருவதை தடுக்க ராணுவ புரட்சிக்கு அழைப்பு விடுத்து, தற்போது பதவி விலகவுள்ள அதிபா் ஜெயிா் போல்சனாரோவுக்கு ஆதரவாக லாரி ஓட்டுநர்கள் பிரேசிலில் கோயாஸ் உள்ளிட்ட 12 மாகாணங்களில் உள்ள நெடுஞ்சாலைகளில் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Truck drivers blocked the road in support of Bolsonaro in Brazil


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->