7 மாத ஊதியத்துடன் விருப்ப ஓய்வு - அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப்!
Trump announces voluntary retirement for government employees with 7 months pay
அமெரிக்காவில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் வகையில், ஊதிய பலன்களுடன் கூடிய விருப்ப ஓய்வு திட்டத்தை அரசு ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் கடந்த 20-ந்தேதி 47-வது அதிபராக, பதவியேற்றார். மேலும் அதிபராக பதவியேற்றதை தொடர்ந்து, நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை டிரம்ப் பிறப்பித்து வருகிறார்.குறிப்பாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடுகடத்தும் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
இந்தநிலையில் அமெரிக்காவில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் வகையில், ஊதிய பலன்களுடன் கூடிய விருப்ப ஓய்வு திட்டத்தை அரசு ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
![](https://img.seithipunal.com/media/Donald Trump 1.jpg)
இது தொடர்பாக அமெரிக்க அரசின் மனிதவள நிறுவனமான பணியாளர் மேலாண்மை அலுவலகம் சார்பில் அரசு ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பது , விருப்ப ஓய்வு திட்டட்தை ஏற்றுக்கொள்ள, வரும் பிப்ரவரி 6-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, செப்டம்பர் 30-ந்தேதி வரை 7 மாத காலத்திற்கு ஊதியம் மற்றும் சலுகைகள் உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள அமெரிக்க அரசின் மனிதவள நிறுவனமான பணியாளர் மேலாண்மை அலுவலகம்ம், அனைத்து நேரடி பணி தேவைகளில் இருந்தும் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Trump announces voluntary retirement for government employees with 7 months pay