திடீர் முடிவெடுத்த ஷேர்சாட் நிறுவனம்.! காரணம் என்ன?  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பிரபல சமூக வலைத்தளத்தில் ஒன்று ஷேர்சாட். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஷேர்சாட் 5 பில்லியன் டாலர் மதிப்புடையது. இங்கு சுமார் 2,200 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

இதன் மூலம் வீடியோ, புகைப்படம் மற்றும் குறுஞ்செய்தி உள்ளிடவை பகிரப்படுகிறது. இந்த நிறுவனம் சமீபத்தில், கூகுள் மற்றும் டெமாசெக் மூலம் 300 மில்லியன் டாலர் முதலீடுகளைப் பெற்றது.

இந்த நிலையில், இந்த நிறுவனம் செலவினங்களைக் குறைப்பதற்காகவும், முதலீட்டாளர்களிடமிருந்து வந்த அழுத்தத்தை எதிர்கொள்வதற்காகவும், 20% ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்துள்ளது. 

அதன் பின்னர் ஷேர்சாட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அங்குஷ் சச்தேவா செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது, "தற்போதைய உலக பொருளாதார சரிவின் காரணமாக, இந்த துரதிர்ஷ்டவசமான முடிவு எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த பணி நீக்கத்தின் மூலம் செலவை குறைக்க முடியும் என நம்புகிறேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty percentage employers dismiss in sharechat company


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->