ட்விட்டர் நிறுவன ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான காரணம் என்ன? - வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


டுவிட்டர் நிறுவன ஒப்பந்தம் விரைவில் நிறைவு பெற உள்ள நிலையில், டுவிட்டரின் உரிமையாளராக உள்ள எலான் மஸ்க், பணியாளர்களின் எண்ணிகையை 75 சதவீதம் குறைக்கவும், மூன்று ஆண்டுகளில் ட்விட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. 

அந்த தகவல் படி, தற்போது டுவிட்டரில் சுமார் 7500 ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், அதனை 2000 ஆக குறைக்கப்படும். இந்நிலையில், இது குறித்து, டுவிட்டர் நிறுவனத்தின் பொது ஆலோசகர் சீன் எட்ஜெட் தங்கள் நிறுவன தொழிலாளர்களிடம் தெரிவித்ததாவது,

"டுவிட்டர் நிறுவனத்தின் ஒப்பந்தம் விரைவில் நிறைவு பெற உள்ள நிலையில், டன் கணக்கில் இதுபோன்ற பொது வதந்திகள் மற்றும் ஊகங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம்" என்று எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள மெமோவில் தெரிவித்துள்ளதாவது, "டுவிட்டர் இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், வருவாயை இரட்டிப்பாக்குவதற்கான முயற்சி குறித்த விவாதங்கள் நிறுத்தப்பட்டன. இணைப்பு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளதால், நிறுவனம் முழுவதும் ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து எதுவும் திட்டமிடப்படவில்லை" என்று தெரிவிக்கபட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twitter company employess dissmiss


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->