உக்ரைன் மீது ரஷ்யாவுடன் தாக்குதலில் இறங்கிய மற்றொரு நாடு.. உக்ரைன் அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா கடந்த ஒரு வாரமாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டு மழை பொழிந்தும், ஏவுகளைகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகிறது. 

ரஷ்ய படைகள் குறிப்பாக உக்ரேனின் தலைநகர் கீவாவை சின்னாபின்னமாகி வருகிறது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் உலகப் பேருக்கு வழிவகுக்குமோ என உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இருநாடுகளும் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. 

இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாதது எடுத்து, உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவம் தாக்குதல் அதிகரித்து உள்ளது. 

இந்நிலையில், இருநாடுகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தை முன்னின்று நடத்திய பெலாரஸ் நாடே ரஷ்யாவுக்கு ஆதரவாக இறங்கியுள்ளது. அந்நாட்டு படைகளுக்கு உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள செர்னிஹிவ் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உக்ரைன் அரசு தனது குடிமக்களுக்கு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், செர்னிஹிவ்  பகுதிக்குள் நுழைந்து உள்ள எதிரிகளை கொன்றால், ஒரு நபருக்கு தலா 300 டாலர் சன்மானம் வழங்கப்படும் என்றும் எதிரிகளின் ராணுவ டாங்கிகளை  அவர்களிடமிருந்து கைப்பற்றிக் கொண்டு வருபவர்களுக்கு ரூ. 250000 பணம் பரிசாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ukraine govt new announcement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->