#BREAKING : உக்ரைனில் இணையதள சேவை முடக்கம்.!
Ukraine Network service stop
ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தி நடத்திவரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யப் படைகள் கொடூர தாக்குதல் நடத்தப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முன்னதாக தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் உக்ரைன் தலைநகரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய ராணுவ வீரர்கள் வான்வழி, தரைவழி, கடல்வழி என மூன்றாவது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையே கடும் சண்டை நடைபெறும் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
மேலும் கீவ் இராணுவ தளத்தை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சியை முறியடித்து விட்டதாக உக்ரைன் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Ukraine Network service stop