லிபியா வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ள ஐ.நா.!
UN released number people died floods in Libya
வட ஆப்பிரிக்கா லிபியாவில் கடந்த வாரம் புயல் காரணமாக காண மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பழமையான இரண்டு அணைகள் உடைந்து வெள்ளம் நகருக்குள் புகுந்ததால் அதிக அளவில் உயிரிழப்பு இருந்தது.
முதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் பின்னர் பத்தாயிரம் பேர் உயிரிழந்தனர். மேலும் 10,000 க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் ஐ.நா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை திருத்தி வெளியிட்டுள்ளது. ஐ.நாவுக்கான மனிதாபிமான விவகார உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையாக 3958 பேர் என்ன தெரிவித்துள்ளார்.
முன்னதாக 11 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதை திருத்தி 50 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐ.நா பொதுச் செயலாளர் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருப்பதாவது, இது குறித்து உலக சுகாதார அமைப்புடன் இணைந்து சரியான பலி எண்ணிக்கை வெளிப்படுத்த இருக்கிறோம் என்றார்.
ஆனால் லிபியாவின் செஞ்சிலுவை சங்கம் ஐ.நாவுக்கு அதிகப்படியான உயிர்பலி எண்ணிக்கை வழங்கவில்லை என தெரிவித்துள்ளது.
1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் வசித்து வரும் ஒட்டுமொத்த நகரமும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம். ரஷ்யா இதற்காக நடமாடும் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்துள்ளது. இத்தாலி கடற்படைக்கு சொந்தமான கப்பலை அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
UN released number people died floods in Libya