அமெரிக்கா, சீனா என்ற பெயரால் உலகப் பொருளாதாரம் 2ஆக பிரிந்து விடக்கூடாது - ஐநா பொதுச்செயலாளர் - Seithipunal
Seithipunal


2022 ஆண்டிற்கான ஆசியான் உச்சி மாநாடு கம்போடியா தலைநகர் புனோம் பென்ஹ்லில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கம்போடியா நாட்டின் நாம்பென் நகரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஐ.நா பொது செயலாளர், அதிக அளவில் பொருளாதாரங்களை வழி நடத்திச் செல்லும் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பெயரால் உலக பொருளாதாரம் இரண்டாக பிரிந்து விடக்கூடாது என்றார்.

இரண்டு வெவ்வேறு கரன்சிகள், விதிகள், அறிவு மேலாண்மை மற்றும் இணையதளங்கள் ஆகியவற்றின் செயல் திட்டங்களின் மூலம் மோதிக் கொள்ளும் அமெரிக்கா மற்றும் சீனா நாடுகள் உலகில் புதிய சவால்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் உலகத்தின் திறன் அனைத்தையும் குழி தோண்டி புதைத்து விடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றில் கடந்த 2 ஆண்டுகளாக உலக பொருளாதாரம் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், உலகப் பொருளாதாரம் இரண்டாக பிரிந்து விடக்கூடிய சூழல் ஏற்படக்கூடாது என்று தெரிவித்தார்.

மேலும் ஆசியான் நாடுகள் இந்த பிரிவை இணைக்கும் பாலம் போல அமைந்துள்ளது என்றும், ஒரே உலகளாவிய சந்தை மற்றும் ஒரே உலகளாவிய பொருளாதாரம் என நாம் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UN secretary says world economy should not be divided as China and US


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->