உலகெங்கும் பயங்கரவாதத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஐநா தலைமையகத்தில் அஞ்சலி.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பயங்கரவாதத்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உலகளாவிய மாநாடு இன்றும், நாளையும் நியூயார்க் நகரில் ஐ.நா தலைமையகத்தில் நடைபெற உள்ளது.

ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியா குட்டெரெஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்கள் உட்பட உலகெங்கும் அனைத்து பயங்கரவாத சம்பவங்களில் பலியான பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

மேலும் தாக்குதலில் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த குடும்பத்தினர் தங்கள் அனுபவங்களை நேரடியாக விவாதிக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் ஐநா முன்வந்துள்ளது.

தீவிரவாதத்தை அழிக்க பல்வேறு நாடுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் சட்டங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UN to Pay Homage to Victims of Terrorism in newyork


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->