41 நாடுகளுக்கு தடை விதித்த அமேரிக்கா? புதிய விசா அப்டேட் செய்த ட்ரம்ப்!
USA VISA Ban 41 countries
டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான், பெலாரஸ், பூட்டான், வனுவாட்டு உள்ளிட்ட 41 நாடுகளின் குடிமக்கள் மீது பயணத்தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூன்று நிலைகளில் தடைகள்
ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின்படி, இந்த நாடுகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
1️⃣ முழுமையான விசா ரத்தாகும் நாடுகள் – ஆப்கானிஸ்தான், கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா, ஏமன் ஆகிய 10 நாடுகளின் குடிமக்களுக்கு முழு விசா தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2️⃣ பகுதி கட்டுப்பாடுகள் எதிர்கொள்ளும் நாடுகள் – எரித்திரியா, ஹைட்டி, லாவோஸ், மியான்மர், தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் குடிமக்களுக்கு சுற்றுலா, மாணவர், புலம்பெயர் விசாக்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
3️⃣ குறைபாடுகளை சரிசெய்ய 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் நாடுகள் – பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளுக்கு குறைபாடுகளை சரிசெய்ய கால அவகாசம் வழங்கப்படும்.
2016-2020-ஆம் ஆண்டில் ஏழு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளுக்கு பயணத் தடை விதித்த டிரம்ப் நிர்வாகம், தற்போது கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் நோக்கில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
USA VISA Ban 41 countries