இந்தோனேசியா பாலியில் எரிமலை வெடிப்பு; விமான சேவைகள் ரத்து..!
Volcano eruption in Indonesia
இந்தோனேசியாவின் பாலியில் லெவோடோபி லக்கி லக்கி எரிமலை வெடித்து சிதற தொடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள விமான நிலையத்தில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவின் முக்கிய சுற்றுலாத் தலம் பாலி. உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள 'லெவோடோபி லக்கி லக்கி' என்ற இரட்டை சிகரம் கொண்ட எரிமலை உள்ளது. இந்த எரிமலை 1703 மீட்டர் உயரம் கொண்டது. நேற்று இரவு முதல் இந்த எரிமலை வெடித்துக் குமுறி வருவதால் இதிலிருந்து கரும் புகை மற்றும் சாம்பல் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சுற்று வட்டாரத்தில் 8 கிலோமீட்டர் தூரம் வரை சாம்பல் வெளியேறி வருவதால் பாலி விமான நிலையத்துக்கு செல்லவிருந்த 07 சர்வதேச விமானங்கள், ரத்து செய்யப்படுள்ளன. மேலும் பல விமானங்கள், தாமதம் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர் விமான நிலையம், எரிமலை சாம்பலால் பாதிக்கப்பவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்தாண்டு நவம்பரில் இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள இந்த எரிமலை வெடித்துச் சிதறியதில் 09 பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுனாமி, எரிமலை அச்சுறுத்தல் நிறைந்த இந்தோனேசியா
இந்தோனேசியா (pacific ring of fire) என்று அழைக்கப்படும் 'பசிபிக் நெருப்பு வளையத்தில்' அமைந்துள்ளது, இங்குள்ள டெக்டோனிக் தகடுகள் அடிக்கடி ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதால் அதிகளவில் நிலநடுக்கங்கள், நில அதிர்வுகள் ஏற்படும் பகுதியாக இருக்கிறது. ஜாவா, சுமத்திரா தீவுகளில் சுனாமி பாதிப்புகளும் அதிகமாக ஏற்படுவதுண்டு. அதேபோல் இந்தோனேசியாவில் பல்லாயிரம் கோடி ஆண்டுகள் பழமையான தீவிரமான, அமைதியான எரிமலைகள் இருக்கின்றமாய் குறிப்பிடத்தக்கது.
English Summary
Volcano eruption in Indonesia