இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதறல்: பேரிடர் மீட்புத்துறையினர் நடவடிக்கை..!
Volcano erupts in Indonesia
இந்தோனேஷியாவில் மவுண்ட் இபு எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது. இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் வாழும்கிராம மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தோனேஷியா பல எரிமலைகள் உள்ள நாடு. அங்கு ஹல்மஹெரா புறநகர் பகுதியில் மவுண்ட் இபு எரிமலை உள்ளது. இது இம்மாத ஆரம்பத்திலேயே நான்கு முறை வெடித்து சிதறியுள்ளது.
இந்நிலையில், ஐந்தாவது முறையாக இன்று மீண்டும் வெடித்துச் சிதறி கரும் புகையை கக்கியுள்ளது. இது குறித்து அந்நாட்டு அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
![](https://img.seithipunal.com/media/erim-tn4n3.jpg)
குறித்த எரிமலையை சுற்றி உள்ள கிராமங்களில் வசிக்கும் 03 ஆயிரம் பேரை வேறு இடத்திற்கு மாற்ற அந்நாட்டு பேரிடர் மீட்புத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே பலர், அக்கிராமத்தில் உள்ள அரங்கம் ஒன்றில் கூடி உள்ளனர். அத்துடன், இக்கிராம மக்கள் மற்றும் சுற்றுலாபயணிகள், எரிமலை சுற்றி 05 கி.மீ., தூரத்திற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்த எரிமலை அவ்வபோது வெடித்துச் சிதறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Volcano erupts in Indonesia