அதிகரிக்கும் போர் பதற்றம்.! 1 மணி நேர இடைவெளியில் 2 ஏவுகணை சோதனை செய்த வடகொரியா.! - Seithipunal
Seithipunal


ஐநா மற்றும் உலக நாடுகளின் எச்சரிக்கையும் மீறி வடகொரியா தனது எல்லை பகுதிகளில் ஆணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

கொரியா தீபகற்பத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டினை எதிர்த்து தீவிரமாக வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்ற நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து ஏவி சோதனை செய்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை தென்கொரியா மற்றும் ஜப்பான் எல்லைக்கு இடையே விழுந்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜப்பான் துணை ராணுவ அமைச்சர் தோஷிரோ, வடகொரியாவின் ஏவுகணைகள் 550 மீட்டர் உயரத்தில் 250 கிலோமீட்டர் தூரம் வரை பறந்ததாகவும், ஜப்பானின் பொருளாதார நகரத்திற்கு வெளியே விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஏவுகணைகளால் எந்தவித பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். ஒரு மாதத்திற்கு பின் மீண்டும் வடகொரியா ஏவுகணை நடத்தியுள்ளதால் கொரிய எல்லை பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

War tension increase as north korea two missile test in 1 hr gap


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->