சுறா மீனை வெட்டிய போது காத்திருந்த அதிர்ச்சி.. வெலவெலத்து போன போலீசார்.?!  - Seithipunal
Seithipunal


அர்ஜென்டினாவில் 32 வயதான டியாகோ பேரியா என்ற நபருக்கு விர்ஜினியா பிரக்கர் எனும் மனைவி இருந்துள்ளார். கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி டியாகோவை காணவில்லை என்று அவருடைய மனைவி போலீசில் புகார் கொடுத்தார். 

அவரை பல இடங்களில் தேடிய நிலையில் அவரது ஹெல்மெட் மற்றும் பைக் ஒரு கடற்கரை ஓரத்தில் போலீசாரால் கண்டறியப்பட்டது. 
8 நாட்கள் தீவிரமாக தேடிய பின்னர் ஒரு அதிர்ச்சி தகவல் அவர்களுக்கு காத்திருந்தது. 


ஒரு மீனவர் சுறா மீனை பிடித்து பழக்கம் போல மீனை சுத்தம் செய்த போது அதில் மனித உடல் பாகங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் போலீசுக்கு தகவல் தெரிவிக்க அதன் பேரில் விரைந்து சென்ற அவர்கள் உடல் பாகங்களை மீட்டு சோதனை செய்ததில் அது காணாமல் போன டியாகோ என்பது தெரியவந்துள்ளது. 

அவர் கடல் பகுதிக்கு எதற்கு சென்றார்? அல்லது யாராவது கொலை செய்து அவரை கடலில் தூக்கி வீசி விட்டார்களா? என்பது பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife dead body in dolphin body


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->