இஸ்ரேலை கண்டு அடிபணியும் ஆஸ்திரேலியா?...ஈரான் தாக்குதலுக்கு பிரதமர் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். மேலும் நஸ்ரல்லாவுடன் இருந்த ஈரானின் மூத்த ராணுவ தளபதி அப்பாஸ் என்பவரும் கொல்லப்பட்டார்.

இதனையடுத்து இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு பகிரங்கமாக அறிவித்தது உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களை குறிவைத்து நேற்று இரவு ஈரான் ஏவுகணைகளை வீசியது. 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஒரே சமயத்தில் வீசி ஈரான் நடத்திய இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேல் முழுவதும் பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. அப்போது டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் வான்தாக்குதல் குறித்து எச்சரிக்கும் சைரன் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது.

இந்நிலையில் இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பக்கத்தில், இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை ஆஸ்திரேலியா கண்டிப்பதாகவும், இது மிகவும் ஆபத்தான விரிவாக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவும் உலக சமூகமும் தங்கள் கோரிக்கைகளில் தெளிவாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பகைமை பொதுமக்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம் என்றும், இஸ்ரேலில் உள்ள ஆஸ்திரேலியர்கள் உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Will australia submit to Israel prime minister strongly condemns Iran attack


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->