அலர்ட்டா இருங்க... முழு மனதுடன் போருக்கு தயாராகுங்க... சீன அதிபர் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


சீன படை வீரர்களை போருக்கு தயாராக இருக்குமாறு சீன அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் உள்ள குவாங்டாங் இராணுவ தளத்தினை பார்வையிட்ட சீன அதிபர் ஜின் பிங் இராணுவ வீரர்களிடையே உரையாற்றியுள்ளார். இது குறித்த உரையாடலில் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், ஒருமித்த மனம் மற்றும் சக்தியுடன் இப்போருக்கு நீங்கள் தயாராக வேண்டும் என்றும், உச்சகட்ட உஷார் நிலையுடன் நீங்கள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டிற்காக முழுமையான விசுவாசத்துடன் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்றும் பேசிய நிலையில், பிற நாடுகள் தொடர்பாக பேசிய தகவல் இல்லை. ஏற்கனவே இந்திய எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்து சீனா பிரச்சனை செய்து வரும் நிலையில், சீன அதிபரின் பேச்சு தொடர்பான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Xi Jinping speech


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->